Sreeram Motors TVS

Sreeram Motors TVS IT IS LOkated in tirunelveli district at moolaikkaraipatti.

30/08/2023
16/08/2023
10/02/2018

நன்றி: புதிய தலைமுறை

ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்க லேட்டஸ்ட் டாப்பிக் அம்மா ஸ்கூட்டர். நம்ம பொண்ணுங்க எல்லாம் ஆர்டிஓ ஆபிசில கால் கடுக்க நின்னு, லைசன்ஸ் வாங்குற வேலைய பாத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, மானிய விலை ஸ்கூட்டர் வாங்குறதுக்கு இவ்வளவு பேரு அடிச்சி புடிச்சி விண்ணப்பிக்கிறத பாக்குறப்போ எல்லாருக்கும் கிடைக்குமானு இயல்பாவே ஒரு கேள்வி எழுது. இந்த திட்டத்துல 1 லட்சம் பேருக்குதான் இந்த வருஷம் இருசக்கர வாகனம் வாங்க மானியம் தருவாங்கலாம் அரசாங்கம்.

வேலைக்கு போற மகளிர் வர்ற 10-ம் தேதிக்குள்ள இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கணும். அப்படி விண்ணப்பிச்ச அப்புறம், நீங்க கொடுத்திருக்க தகவல் சரிதானா அப்படினு ஒரு சரிபார்த்தல் நடக்கும். அதுல கொஞ்ச பேர நீக்கிருவாங்க.

அதுக்கு பிறகு, கள சரிபார்ப்பு. அதாவது , நீங்க கொடுத்திருக்க அட்ரஸ் சரியா இருக்கா, வேலைக்குதான் போறீங்களா? வருமானம் மானியத்துல பைக் வாங்குற அளவுக்குதான் இருக்கா ? இப்படி எல்லாத்தையும் சரிபார்ப்பாங்க. இதுல இன்னும் பாதிப்பேர காலி பண்ணிடுவாங்க.

அடுத்தது சூப்பர் செக் அப். அப்ளிகேஷன் ஓகே, இவங்கள இந்த திட்டத்துக்கு பரிசீலனை செய்யலாம்னு பரிந்துரை செய்யிற செக் அப்தான் சூப்பர் செக் அப். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் சூப்பர் செக் பண்றதுக்கு ஒரு அதிகாரிய நியமிப்பாங்க. அந்த அலுவலர் அக்கு வேர், ஆணி வேர்னு எல்லாத்தையும் செக் பண்ணி , ஒரு லிஸ்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாரு. இந்த வெரிபிகேஷன்ல பாதிப்பேரு காலி.


ஒரு வழியா பரிந்துரை பட்டியல் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், தேர்வுக்குழு கூடும். அது என்ன தேர்வுக்குழு? ஆமாங்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 3000 பேருக்கு மானியம் கிடைக்க வாய்ப்பிருக்கு. எனவே அந்த 3000 பேரு யாருனு செலக்ட் பண்றதுக்கு 8-10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கு. அவங்க பேருதான் தேர்வுக்குழு. மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் அந்த குழுவோட தலைவரா இருப்பார்.

இப்படிலாம் பல கட்ட சோதனைக்கு பிறகு பயனாளார்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அப்படி கண்டுபிடிக்கப்படுவர்கள் 125 சிசி திறன் கொண்ட வாகனம் , கியர் இல்லாத வாகனம் மட்டுமே வாங்க முடியும். அப்படி வாங்கப்படும் வாகனத்துக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அல்லது வண்டியின் விலையில் பாதி , இவை இரண்டில் எது குறைவோ அந்த பணம் கொடுக்கப்படும்.

அப்புறமா சொல்ல மறந்துட்டனே, நீங்க மொதல்ல வண்டி வாங்கிட வேண்டும். அப்புறம் மானியத்துக்கு அப்ளை பண்ணனும். 45 நாள்ல அப்ளை பண்ணிட்டீங்கனா, உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் வந்துவிடும். லோன் வாங்குனா வங்கியும், பயனாளரும் சேர்ந்து கையெழுத்தெல்லாம் போட்டு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பனும். அவங்க 24 மாசத்துக்குள்ள முடியிற மாதிரி தவணை முறை திட்டமெல்லாம் போட்டு பணம் கொடுத்துடுவாங்க..

அப்புறம் என்ன.. ஸ்கூட்டர் வாங்க ரெடியா

24/01/2018

பயனாளிகளின் தகுதி

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இருச்சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..

இருசக்கர வாகனம் 01.01.2018 பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் தகுதி:

1.நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.

2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

4.பெண்; வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்); ஆர்வலர்கள்..

அம்மா ஸ்கூட்டர் படிவத்தை பூர்த்தி செய்ய, SREERAMotors மோட்டார்ஸ் உதவி வழங்குகின்றது. தொடர்பிற்கு: 8300356659& 9442796659
SREERAMotors,

வயது வரம்பு
வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..

மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி மலைப்பகுதி, மகளிரைக்குடும்பதலைவராக கொண்ட பெண்,
ஆதரவற்ற மகளிர்,
ஆதரவற்ற விதவை,
மாற்றுதிறனாளி(பெண்),
திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர்,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்..

மனுக்கள் 22.01.2018 முதல் 05.02.2018 வரை

ஊராட்சி ஒன்றியங்கள்
பேரூராட்சி
நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 05.02.2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்..

கடன் வசதி
பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்..

அம்மா ஸ்கூட்டர் படிவத்தை பூர்த்தி செய்ய, SREERAMotors மோட்டார்ஸ் உதவி வழங்குகின்றது. தொடர்பிற்கு: 8300356659 & 9442796659
SREERAMotors

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பிறந்த தேதிக்கான சான்றிதழ்
• இருப்பிடச்சான்றிதழ்; (வாக்காளர் அடையாள அட்டைஃஇருசக்கர வாகன உரிமம்ஃஆதார் அடையாள அட்டையின் நகல்)
• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
• வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ்.
• நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ்.
• ஆதார் அடையாள அட்டை.
• எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
• கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.
• சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
• சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )
• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை
• இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி..

அம்மா ஸ்கூட்டர் படிவத்தை பூர்த்தி செய்ய, SREERAMotors மோட்டார்ஸ் உதவி வழங்குகின்றது. தொடர்பிற்கு: 8300356659& 9442796659
SREERAMotors,

04/08/2016

GOOD MORNING

01/06/2016

TVS VICTOR NEW EDITION

22/08/2015
jupiter vs activa
10/10/2014

jupiter vs activa

THREE SCOOTERS RULING THE ROAD.FOR BOOKING JUPITER CALL NOW 04635 258502
30/09/2014

THREE SCOOTERS RULING THE ROAD.FOR BOOKING JUPITER CALL NOW 04635 258502

TVS SportFor booking call - 04635258502
06/09/2014

TVS Sport

For booking call - 04635258502

Address

Tirunelveli
627354

Telephone

04635258502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreeram Motors TVS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sreeram Motors TVS:

Share