24/03/2020
பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் வேண்டுகோள்...
உணவு, தண்ணீர், மின்சாரம் போன்று வாகன எரிபொருளும் ஒரு அத்தியாவசியம் என்ற காரணத்தால் இரவு, பகல், மழை, வெயில் பாராமல் எக்காலங்கலிலும் தடையின்றி சேவை செய்துகொன்டிருகின்றோம்.
ஆகையால் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் (பால், காய்கறிகள், சிலிண்டர், ஆம்புலன்ஸ், காவல்துறை, மற்றும் அரசாங்க வாகனங்கள்) தடையின்றி இயங்குவதற்காக மட்டுமே இந்த சூழ்நிலையிலும் நாங்கள் இயங்கி கொண்டிருக்கிறோம்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் குடும்பங்கள் உண்டு அவர்களின் அச்சங்களையும் மீறி நாங்கள் எங்கள் கடமைகளை செய்து வருகிறோம்.
இதை பொதுமக்கள் புரிந்து கொண்டு இந்த நாட்களை விடுமுறை நாட்களாக எண்ணி தேவையின்றி வெளியே வந்து எங்களை சிரம படுத்தாதீர்கள். மேலும் எங்கள் சேவை தொடரவும் எங்கள் பாதுகாப்புக்காகவும் அனைவரும் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..... 🙏🏻🙏🏻🙏🏻
-அன்புடன்
AVM பங்க்