02/04/2023
*ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசுகி நிறுவனம் முடிவு.!*
*மாருதி சுசுகி நிறுவனம், தனது அதிக விற்பனை கார்களுள் ஒன்றான ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.*
*3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுவரும் ஆல்டோ 800 கார், மாருதி நிறுவனத்தின் என்ட்ரிலெவல் காராக இருந்து வந்தது. இந்நிலையில், பி.எஸ்.6 மாசுகட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப, இந்த*
*காரை மேம்படுத்த அதிக செலவாகும் என்பதால், அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக,அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.*
*ஆல்டோ K10 கார் தேவை அதிகரித்திருப்பதும், ஆல்டோ 800ன் உற்பத்தியை நிறுத்துவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. இனி, ஆல்டோ K10 கார், மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் காராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*