மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர்

  • Home
  • India
  • Padalur
  • மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர்

மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர், Automotive repair centre, 3/358, Main Road, Padalur.

10/04/2024

#பெற்றோர்கள்_கவனத்திற்கு-:

இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்.

அனைத்து இருசக்கர வாகனங்களும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும்...BS6 வாகனங்களும் சிறந்த முறையில...
04/10/2023

அனைத்து இருசக்கர வாகனங்களும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும்...
BS6 வாகனங்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்...
தொடர்புக்கு
மதுரா மோட்டார்ஸ்
பாடாலூர்
90 25 522 522
90 95 614 614

24/09/2023
19/09/2023

மந்திராலயம்,
ஸ்ரீசைலம்,
அகோபிலம்,
மஹாநந்தி,
காளஹஸ்தி,
திருப்பதி,
அலமேலுமங்காபுரம்,
ஸ்ரீனிவாசமங்காபுரம்,
காணிப்பாக்கம்,
ஸ்ரீபுரம் பொற்கோயில்,
திருவண்ணாமலை
முதலிய ஊர்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல
மதுரா ட்ராவல்ஸ்
பாடாலூர்
90 25 522 522
90 95 522 522

18/09/2023

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

18/09/2023

அதிகாலையில்
எழும் பழக்கம்
உள்ளவர்கள் !!!
வாழ்வில்
முன்னேற்றம்
கண்டு
வாழ்வார்கள்!!!

இன்றைய வேலை Scooty Streak Full Service...
22/09/2022

இன்றைய வேலை Scooty Streak Full Service...

24/03/2022

மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி?

பரபரப்பாக இயங்கும் சாலைகளில் பயணிக்கும் நாம் மோட்டார் சைக்கிளின் ஆக்ஸல்ரேட்டரை பயன்படுத்துவதை விட, பிரேக்கை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். அதனால் பிரேக் போடும்போது நாம் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பிரேக் போடும்போது செய்யவேண்டியவை
மோட்டார் சைக்கிள்களில் பிரேக் அமைப்பை எப்போதும் மென்மையாகவே கையாளுங்கள்.
பிரேக் போட, அதிகப்பட்ச அழுத்தம் தேவைப்படும் போது அதன் லிவரை படிபடியாகவே உயர்த்த பழகிக்கொள்ளுங்கள்.
மற்றொரு முக்கியமான செயல்பாடு என்றால், முன் பின் என இரண்டும் சக்கரங்களுக்கும் சேர்த்தே பிரேக் பிடியுங்கள். இதனால் பின்பகுதியில் ஏற்படும் உராய்வு தடுக்கப்பட்டு, வண்டியின் மொத்த எடையும் முன்பகுதியில் உணரப்படும், இது வாகனத்தில் மீதான் கட்டுபாடு முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும்.

சாலையில் டிராஃபிக் அதிகமாக இருந்தாலும், முடிந்தவரையில் உங்களை சுற்றி ஒரு சிறிய இடைவெளி இருக்குமாறு வாகனத்தை செலுத்துங்கள். காரணம், அவசர கதியில் நீங்கள் பிரேக் பிடிக்க நேரும்போது, பெரும் அச்சம் மனதில் எழும். அவற்றை சமாளிக்க அந்த இடைவெளி உங்களுக்குள் அசுவாசத்தை ஏற்படுத்தும்.

இருசக்கர பயணத்தின் போது சாலையில் நிச்சயம் கவனம் தேவை, குறிப்பாக நீங்கள் இருவேறு வழித்தடத்தில் போகும்போது அதிக கவனம் தேவை. கார்களும், பைக்குகளும் அதிகம் சந்தித்து கொள்ளும் நேரங்களில் டிராஃபிக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த தருணங்களில் பிரேக் உடன் கூடிய நிதானமானவே ரைடிங்கே பாதுகாப்பை தரும்.

இருசக்கர வாகனங்களில் வலிமையாக பிரேக் பிடிப்பது பாதுகாப்பான ஒன்று, அப்போது தான் உங்களது பின்பகுதி சக்கரம் சிறிது உயர்ந்து வண்டியின் எடை முழுக்க உங்களது கட்டுபாட்டில் வரும். அல்லது ஆண்டி லாக் பிரேக் அமைப்பு (ABS) துரிதமாக செயல்படும்.
ஆனால் இதில் உள்ள சிறிய குறைபாடு என்னவென்றால், வண்டியின் மைலேஜ் பாதிக்கப்படலாம். அனால் அதற்கு முக்கியத்துவம் தந்தால் ஆபத்து காலத்தில் அபாயத்தை சந்திக்க நேரிடும்.


பிரேக்கின் போது செய்யக்கூடாதவை
மோட்டார் சைக்கிள்களில் பின்பகுதியை விட எப்போதும் முன் சக்கரத்திற்கான பிரேக்குகள் தான் வலிமையானவை. இதை மறந்து, அவசர காலத்தில் பின் சக்கரத்திற்கான பிரேக்குகளை நீங்கள் பயன்படுத்தினால், வண்டியின் மொத்த எடையும் உங்கள் கட்டுபாடிற்கு வராமல், பின்பகுதியில் உராய்வை ஏற்படுத்தும்.

சாலைகளில் மற்ற வாகன ஒட்டிகள் உங்களது வழியில் இடையூறு ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள். காரணம், இதனால் உங்களது பயணத்தில் சிக்கல் ஏற்படலாம். எப்போதும் டிராஃபிக் நேர்ந்தாலும் தன்னம்பிக்கை கொண்டு வண்டியை முன் செலுத்துங்கள்.

அசம்பாவிதம் நேர உள்ளதற்கான வாய்ப்பை உணர்ந்தால், மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். சாலையில் உங்களது பார்வையை செலுத்தி, டிராப்பிக்கை கவனித்து, அவசர கால தருணத்தை சாத்தியமாக்கிக் கொள்ள முயலுங்கள்.

அவசர காலத்தில் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க, முன்பே நாம் பார்த்தது போல, சாலையில் நமக்கான வழியில் சிறிது இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நேரும் அபாயத்தை கடக்க இது ஒரு எளிமையான டிரிக்.

சில சமயம் ஆபத்தும் நேரிடும்போது சரியாக சிந்திக்க வராது தான், அதனால் தருணத்தை வீணாக்காதீர். நீங்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிளின் லிமிட், வேகம், பிரேக்கிங் அமைப்பு அகியவற்றை முன்பே தெரிந்து வைத்திருந்தால், அதுகூட அப்போதைய நேரத்திற்கு சமயோஜித சிந்தனையை தரலாம்.

உங்களது மோட்டார் சைக்கிளின் மேல் நம்பிக்கை வையுங்கள். அதை ஒட்டிசெல்லும் போது தன்னம்பிக்கையை வளருங்கள். இதை கடைப்பிடித்தால் ஆபத்து என்று ஒன்று வந்தால் அதுவே நமக்கு பாதுகாப்பாக அமையும்.
இறுதியாக, எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள். ஹெல்மெட் அணிந்த பிறகு, பக்கிள் போட மறக்காதீர்கள்

சமுதாய அக்கறையில்
மதுரா மோட்டார்ஸ்
பாடாலூர்
90 25 522 522
90 95 614 614

08/03/2022

அனைத்து இரு சக்கர வாகனங்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்

01/03/2022

அனைத்து இரு சக்கர வாகனங்களையும் ஒரிஜினல் உதிரி பாகங்களை கொண்டு குறித்த நேரத்தில் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்,
தொடர்புக்கு
90 25 522 522
90 95 614 614

Address

3/358, Main Road
Padalur

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 7:30pm
Friday 9am - 7:30pm
Saturday 9am - 7:30pm

Telephone

+919025522522

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதுரா மோட்டார்ஸ்_பாடாலூர்:

Share