SRI Vishnumaya CARS

SRI Vishnumaya CARS We are the leading used cars providers in madurai & also its surroundings.

Our new shop🤩🤩
07/10/2021

Our new shop🤩🤩

28/06/2020

Read in Tamil: இந்திய சாலைகளின் அரசனான அம்பாஸிடர் கார், புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்...

26/06/2017
25/06/2017
26/07/2014

காரிலிருந்து வரும் வாடையை நுகர்ந்தே சில முக்கிய பிரச்னைகளை கண்டுபிடிக்கலாம். இதன்மூலம், பெரிய ஆபத்துக்களிலிருந்தும், செலவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.
1.டிரைவ் பெல்ட் கழன்றுவிட்டாலோ அல்லது எஞ்சினுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் ஹோஸ் குழாய்கள் சரியான இடத்தில் பொருத்தப்படாமல் டிரைவ் புல்லியில் உராய்ந்து கொண்டிருந்தாலோ ரப்பர் தீயும் வாடை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
2.சூடான ஆயில் வாடை அடித்தால் எக்சாஸ்ட் அமைப்பில் ஆயில் கசிவு ஏற்படுகிறது என்று அர்த்தம்.
3.பெட்ரோல் அல்லது டீசல் வாடை அதிகமாக இருந்தால் fuel இன்ஜெக்டர் அல்லது எரிபொருள் தொட்டியில் கசிவு இருப்பதாக அர்த்தம். இது தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால் உடனடியாக சர்வீஸ் மையத்தில் பரிசோதித்துவிட வேண்டும்.
4.சிரப் போன்ற வாடை வந்தால் கூலண்ட் கசிவு அல்லது எஞ்சினை குளிர்விக்கும் அமைப்பில் பிரச்னை இருக்கலாம்.
5.தரைவிரிப்பு தீயும் போது வரும் வாடை போன்று வந்தால் பிரேக்கில் பிரச்னை இருப்பதாக அர்த்தம்.
6.அழுகிய முட்டை நாற்றம் வந்தால் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக அர்த்தம். கேட்டலிடிக் கன்வெர்ட்டர் கருவி சரியாக ஹைட்ரஜன் சல்ஃபடை ஹைட்ரஜன் டை ஆக்சைடாக வடிகட்டவில்லையென்று அர்த்தம். இது எஞ்சினில் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.
வித்தியாசமான வாடை எதுவும் வந்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக மெக்கானிக்கிடம் கொண்டு சென்று சோதித்து விடுவது நல்லது

புதிய வாகனங்களை வாங்கும்போது முதல் 1,000 கிலோமீட்டருக்கு மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர...
17/07/2014

புதிய வாகனங்களை வாங்கும்போது முதல் 1,000 கிலோமீட்டருக்கு மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை ரன்னிங் இன் பீரியட் என்று கூறுகின்றனர் தயாரிப்பாளர்கள்.
முதல் 1000 கிமீ தூரத்தை ரன்னிங் இன் பீரியடாக கொடுத்தாலும், முதல் 2500 கிலோமீட்டர் தூரம் வரை மிதமான வேகத்தில் ஓட்டுவது நல்லது. இதுஎஞ்சின் சிறப்பாக செயல்பட உதவுவது மட்டுமின்றி தயாரிப்பு நிலைகளில் ஏற்படும் குறைகளால் சில கசப்பான அனுபவங்களை தவிர்க்க உதவும்.

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ,...
23/06/2014

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...

ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

[மோட்டார் விகடன் - ஜனவரி 2012 இதழில் இருந்து]

28/05/2014

கார் பராமரிப்புக்கு சில பயனுள்ள டிப்ஸ்:

காரைக் கையாள்வதற்கு முன், அதன் யூசர் மேனுவல் முழுவதும் படியுங்கள்.

எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும்.அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்புங்கள். விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்யுங்கள். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாகி… சீட் கவர் துவங்கி பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.

அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள். காரில் மியூசிக் சிஸ்டம் அல்லது வேறு எலெக்ட்ரிக்கல் விஷயங்கள் எதையாவது நீங்கள் வெளி மெக்கானிக்குகளை வைத்து மாட்டினால், தரமான ஒயர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் யாரிடமாவது காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா என்பது தெரிய வரும்! நண்பர் காரை நன்றாக கையாள தெரிந்தவராக இருப்பது அவசியம்.

ஹெட் லைட்டுகள் சரியாக ஒளிர்கிறதா என்று அடிக்கடி செக் செய்யுங்கள். விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்யுங்கள். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.

வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பர்ஸைப் பதம் பார்த்துவிடும். வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்

சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் பெரிய செலவுகள் வராமல் தவிர்க்கலாம்.

28/04/2014

Address

Madurai
625001.

Telephone

0452-2343754

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Vishnumaya CARS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share