02/08/2025
திருப்பூர்:-𒆜மின்தடை 𒆜 𒆜மின்தடை 𒆜 𒆜மின்தடை
வீரபாண்டி, சி.ஜி.புதூர், ஆண்டிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், ஆ.யு.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், முல்லை நகர், இடும்பன் நகர், சு.மு.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் அவினாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கைகாட்டிபுதூர், ராயம்பாளையம், சக்திநகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.