Sri Balaji Auto Consultancy

Sri Balaji Auto Consultancy All kinds of vehicles Buy (or) Sell Contact

டெஸ்ட்டிங்கில் மஹிந்திரா XUV 5OO பெட்ரோல் எஸ்யூவி...ஸ்பை படங்கள்..,XUV 5OO.... மஹிந்திராவின் முதல் மோனோகாக் எஸ்யூவியான இ...
11/12/2017

டெஸ்ட்டிங்கில் மஹிந்திரா XUV 5OO பெட்ரோல் எஸ்யூவி...ஸ்பை படங்கள்..,

XUV 5OO.... மஹிந்திராவின் முதல் மோனோகாக் எஸ்யூவியான இது, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானது. அட்டகாசமான டிசைன், அதிகப்படியான வசதிகள், அதிரடியான விலை என அசத்தியதால், கார் விற்பனைக்கு வந்த 10 நாட்களிலேயே இதன் புக்கிங், 8 ஆயிரம் கார்களைத் தாண்டியது. பின்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் Lucky Draw முறையில் மீண்டும் இந்த எஸ்யூவியின் புக்கிங்கை மஹிந்திரா துவக்கியது தனிக்கதை. இப்படி வெற்றிகரமான தயாரிப்பாக இருந்த XUV 5OO, காம்பேக்ட்டான புதிய போட்டியாளர்களால் (ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்) தனது இடத்தை இழந்தது. அதனைச் சரிசெய்யும் விதமாக, கடந்த 2015-ல் XUV 5OO-ன் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியது மஹிந்திரா.

இது முந்தைய மாடலைவிட டிசைனில் கொஞ்சம் மாற்றங்களைப் பெற்றிருந்ததுடன், முன்பைவிட அதிக வசதிகளையும் கொண்டிருந்தது. ஆனால் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா, டாடா ஹெக்ஸா, ஜீப் காம்பஸ் எனப் புதிய போட்டியாளர்கள் வரிசையாக வெளிவந்ததால், மஹிந்திராவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த காரின் விற்பனை அமையவில்லை. எனவே இழந்த இடத்தை மீட்டெடுக்கும் விதமாகவும், பெட்ரோல் எஸ்யூவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டை மனதில் வைத்தும், XUV 5OO-ன் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது மஹிந்திரா.

படங்களைப் பார்க்கும்போது, எதிர்பார்த்தபடியே XUV 5OO-ன் டிசைனில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கு இந்த எஸ்யூவியின் க்ரில் மற்றும் டெயில்கேட் ஆகியவை சிறந்த உதாரணம். சமீபத்தில் அறிமுகமான KUV 1OO NXT போலவே, XUV 5OO-ன் டிசைனையும் மஹிந்திரா பிரிமியமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பறைசாற்றும் விதமாக, ஸ்பை படத்தில் இடம்பெற்றிருக்கும் கார் முழுவதுமாக Camouflage செய்யப்பட்டிருக்கிறது. எனவே Sheet Metal-ல் வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால் ஹெட்லைட், டெயில் லைட், அலாய் வீல்கள், பம்பர் ஆகியவை, தற்போதைய மாடலில் இருப்பதுபோன்றே இருக்கின்றன. XUV 5OO-ன் கேபினைப் பொறுத்தமட்டில், இது அப்படியே தொடரும் எனலாம். ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், XUV 5OO-ன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மேம்படுத்தியது மஹிந்திரா. ஆண்ட்ராய்டு ஆட்டோ, கார் ஓட்டப்படும் விதத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய Ecosense, Bluesense, Emergency Call, Connected Apps போன்ற பல வசதிகளை இது கொண்டிருக்கிறது. மேலும் கேபினில் இடம்பெற்றுள்ள அப்ஹோல்சரி மற்றும் பிளாஸ்டிக்கிலும் முன்னேற்றங்கள் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

மேலே சொன்ன விஷயங்களைத் தாண்டி, XUV 5OO-ல் மிக முக்கியமான மாற்றம், அதன் பானெட்டுக்கு அடியேதான் நிகழ உள்ளது. தற்போதைய மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk 140 டீசல் இன்ஜினை, 170bhp பவரை வெளிப்படுத்தும் வகையில் ரீ-டியூன் செய்ய உள்ளது மஹிந்திரா. இதற்காகத் தனது TUV 3OO காரில் இருக்கும் சிறிய mHawk 100 இன்ஜினில் இருக்கும் Two-Stage டர்போசார்ஜர் தொழில்நுட்பம், இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் அதிகம்! இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களுக்கு இடையேயான விலை வித்தியாசம், தற்போது 11 ரூபாய் என்றளவில் இருக்கிறது. எனவே பெட்ரோல் கார்களை நோக்கி இந்திய கார் சந்தை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், XUV 5OO பேஸ்ஃலிஃப்ட்டில் பெட்ரோல் இன்ஜினைக் களமிறக்க உள்ளது மஹிந்திரா.

இது 2.2 லிட்டர் mHawk 140 டீசல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதால், இதுவும் 140bhp பவர் மற்றும் 33kgm டார்க்கையே வெளிப்படுத்தும் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால் டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனேயே பெட்ரோல் இன்ஜினை மஹிந்திரா விரைவில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது. இது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு நேரடிப் போட்டியாளராகப் பொசிஷன் செய்யப்பட உள்ளது. பின்னாளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வெளிவரும் என நம்பலாம்.

XUV 5OO-ன் டீசல் வேரியன்ட்கள் அனைத்தும் W முறையில் பெயரிடப்பட்டுள்ளன. எனவே ஒரே டாப் வேரியன்ட்டில் களமிறங்க உள்ள இந்த எஸ்யூவியின் பெட்ரோல் மாடல், G முறையில் பெயரிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளிவந்த W9 வேரியன்ட்டுக்கு மேட்ச்சாக, G9 எனும் வேரியன்ட்டில், தனது புதிய 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிறப்பான அறிமுக விலையை மனதில் வைத்து, சில வசதிகள் இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

எனவே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 காற்றுப்பைகள், ABS, EBD, ESP, Rollover Mitigation, TPMS, கீ-லெஸ் என்ட்ரி உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட், அலாய் வீல்கள் போன்ற வசதிகள் இருந்தாலும், Connected Apps - லெதர் சீட்ஸ் - எலெக்ட்ரிக் சன்ரூஃப் - 6 காற்றுப்பைகள் போன்றவை இருக்காது எனத் தெரிகிறது. இந்த வகை கார்களில், மைலேஜுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றாலும், நிச்சயமாக பெர்ஃபாமென்ஸை விரும்புபவர்கள் அதிகம்; எனவே ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இது எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது, போகப் போகத்தான் தெரியும்.

பஜாஜ் அவென்ஜருக்குச் செக்... சுஸூகியின் மாடர்ன் க்ரூஸர் - இன்ட்ரூடர் 150: பர்ஸ்ட் லுக் !இன்ட்ரூடர் என்ற பெயரில், 150-160...
09/12/2017

பஜாஜ் அவென்ஜருக்குச் செக்... சுஸூகியின் மாடர்ன் க்ரூஸர் - இன்ட்ரூடர் 150: பர்ஸ்ட் லுக் !

இன்ட்ரூடர் என்ற பெயரில், 150-160சிசி பிரிவில் க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது சுஸூகி. இந்தியா மற்றும் சர்வதேச பைக் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் XL சைஸ் க்ரூஸர்களான இன்ட்ரூடர் M800 மற்றும் இன்ட்ரூடர் M1800 ஆகியவற்றை நினைவுபடுத்தும்படியான டிசைன், இந்த பைக்கின் மாடர்ன் க்ரூஸர் என்ற பொசிஷனிங்கை நியாயப்படுத்தி விடுகிறது. ஹெட்லைட்டில் இருக்கும் LED பார்க்கிங் லைட், பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. தவிர முன்பக்கத்தில் பிரம்மாண்டமான டேங்க் ஸ்கூப்புடன் வசிகரிக்கும் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஜிக்ஸரில் இருப்பதைவிட ஒரு லிட்டர் குறைவு - அவென்ஜரைவிட 3 லிட்டர் குறைவு! மேலும் இது பைக்கின் சிறிய இன்ஜினை அழகாகக் கவர் செய்துவிட்டது என்பதே உண்மை.

அவென்ஜரைவிட 15மிமீ அதிக உயரத்தில் இருக்கும் இன்ட்ரூடர் பைக்கின் ரைடர் மற்றும் பில்லியனுக்கான ஸ்ப்ளிட் சீட் (740 மிமீ), தேவையான குஷனிங்குடன் சொகுசாக இருக்கிறது. ஹயபூஸா பைக்கில் இருப்பதுபோன்ற LED டெயில் லைட்டுக்கு மேலே இருக்கும் க்ராப் ரெயில் மற்றும் அதற்குக் கிழே இருக்கும் மட்கார்ட்டும் அழகாக பொருந்தியுள்ளன. என்றாலும், இவற்றின் ஆஜானுபாகுவான தோற்றம், இந்த பைக்கில் இருக்கும் அகலமான 140/60 R17 டயரையே சிறிதாகக் காட்டுகின்றன என்பதே நிதர்சனம். தவிர முன்பக்கத்தில் இருக்கும் கெத்து, பின்பக்கத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்; அதாவது ஒரு பாடி பில்டர், ஒல்லியான கால்களைக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? தவிர Dual Port பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ட்வின் எக்ஸாஸ்ட் பைப், நீளமாகவும் பெரிதாகவும் இருக்கிறதோ?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு 300-400சிசி பைக்கின் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150. மேலும் பைக்கைச் சூழ்ந்திருக்கும் பிளாஸ்டிக்ஸ், நீண்ட காலப் பயன்பாட்டில் நிலைகுலையாமல் இருக்குமா என்பதை, காலம்தான் சொல்லும்! என்னதான் டிசைன் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஜிக்ஸருக்கும் இன்ட்ரூடருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த பைக்கில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் - டயர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரியர் வியூ மிரர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, ஜிக்ஸர் பைக்கில் இருந்தே பெறப்பட்டுள்ளன.

ரியர் வியூ மிரர்களில் கூடுதலாக க்ரோம் பூச்சும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கூடுதலாக ஏபிஎஸ் லைட்டும், கறுப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர்களும் இடம்பெற்றுள்ளன. சேஸியும் ஒன்றுதான் என்றாலும், க்ரூஸர் கோட்பாடுகளுக்கு ஏற்ப பல மாறுதல்களை (பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கும் ஹேண்டில்பார், முன்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ், நீளமான வீல்பேஸ், புதிய சப் ஃப்ரேம்) சுஸூகி செய்திருக்கிறது. இப்படி கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜிக்ஸரை விட 13 கிலோ எடை கூடியிருக்கிறது இன்ட்ரூடர் 150 (148 கிலோ). அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கும் இதே எடைதான்; கிரவுண்ட் கிளியரன்ஸும் 170மிமீ.

நிலைமை இப்படி இருக்க, இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, 14.8bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் ஸ்மூத்தான 154.9சிசி கார்புரேட்டட் இன்ஜின்தான்! எனவே அதிக எடையைச் சமாளிக்கும் விதமாக, இன்ஜினின் இன்டேக் - எக்ஸாஸ்ட் அமைப்பு, செயின் ஸ்ப்ராக்கெட், கியர் ரேஷியோ ஆகியவற்றை மாற்றியமைத்திருக்கிறது சுஸூகி. எனவே க்ரூஸர் பைக்குகளுக்குத் தேவையான மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ், இந்த பைக்கில் இருக்கும் எனலாம். ஆனால் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைப் போலவே, இதுவும் 100கிமீக்கும் அதிக வேகங்களில் செல்லும்போது கொஞ்சம் டல்லாக இருக்குமா என்பது, பைக்கை ஓட்டிப்பார்த்தால் தெரிந்துவிடும்.

ஜிக்ஸர் SF பைக்கைப் போலவே, இன்ட்ரூடர் 150 பைக்கிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனை, அடுத்த ஆண்டில் சுஸூகி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடை - அளவுகள் - இன்ஜின் போன்ற ஏரியாக்களில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்குச் சமமாகவே இருக்கிறது இன்ட்ரூடர் 150. ஆனால் அவென்ஜரை விட 47மிமீ குறைவான நீளம் (2130 மிமீ) மற்றும் 75மிமீ குறைவான வீல்பேஸ் (1405மிமீ) காரணமாக, கையாளுமையில் இன்ட்ரூடர் அசத்தலாக இருக்கும் எனத் தெரிகிறது. ஜிக்ஸரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்ற பிரச்னையை, இன்ட்ரூடரில் 10மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸைக் (169மிமீ) கொடுத்து சரிசெய்துவிட்டது சுஸூகி.

இந்தப் புதிய மாடர்ன் க்ரூஸர் பைக்கின் புக்கிங், சுஸூகி டீலர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டதுடன், இந்த மாதத்தின் இறுதிக்குள்ளாக மாதத்தின் துவக்கத்தில், டீலர்களுக்கு பைக்குகளின் Dispatch துவங்கும் என நம்பலாம். பஜாஜின் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குடன் ஒப்பிடும்போது, அதிக வசதிகளை ஸ்டாண்டர்டாகக் கொண்டுள்ளது இன்ட்ரூடர் 150. தடிமனான ஃபோர்க் மற்றும் டயர்கள், டிஜிட்டல் மீட்டர், LED டெயில் லைட், பின்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக், மோனோஷாக் சஸ்பென்ஷன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, இதற்கான சிறந்த உதாரணம். இப்படி அவென்ஜரில் இல்லாத பல விஷயங்களை இன்ட்ரூடரில் சேர்த்திருக்கும் சுஸூகி, பைக்கின் விலையையும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்டது!

சென்னை ஆன் ரோடு விலையான 93,488 ரூபாய்க்கு, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 விற்பனை செய்யப்படும் நிலையில், இன்ட்ரூடர் 150 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 98,340 ரூபாயாக இருக்கிறது! இதை வைத்துப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட இதே எக்ஸ் ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் ஜிக்ஸர் SF-Fi ABS பைக்குக்குச் சமமான 1.13 லட்சம் என்ற ஆன் ரோடு விலையில்தான், இந்த பைக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அதாவது அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைவிட 20 ஆயிரம் ரூபாயும், அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்கைவிட 10 ஆயிரம் ரூபாயும் அதிகம் மக்களே! ஆனால் இன்ட்ரூடரின் பிரிமியமான டிசைன், அதிகப்படியான வசதிகள், ஸ்மூத் பெர்ஃபாமென்ஸ், சிறப்பான கையாளுமை ஆகியவற்றுக்காக, நிலையான ஒரு ரசிகர் வட்டம் உருவாகும் என தீர்க்கமாக நம்புகிறது சுஸூகி.

விரைவில் வருகிறது YZF-R15 V3.0...டெஸ்ட்டிங்கில் புதிய யமஹா R15 !!!யூத் பைக்கர்களுக்குத் தற்போது ஹைப்பை ஏற்றுவது யமஹாவின்...
11/11/2017

விரைவில் வருகிறது YZF-R15 V3.0...டெஸ்ட்டிங்கில் புதிய யமஹா R15 !!!

யூத் பைக்கர்களுக்குத் தற்போது ஹைப்பை ஏற்றுவது யமஹாவின் YZF-R15 V3.0. இந்தோனேஷியா மற்றும் வங்கதேசத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, முன்பைவிட டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் பலத்த முன்னேற்றம் கண்டிருக்கும் இந்த பைக் வெளிவந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இது எப்போது கிடைக்கும் என்பது புலப்படாமலேயே இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் தனது R15 V3.0 பைக்கை டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறது யமஹா. இணையத்தில் வைரலாகப் பரவிவரும் ஸ்பை ஃபோட்டோக்களைப் பார்க்கும்போது, Production Ready-ஆகக் காட்சியளிக்கும் இந்த பைக், விரைவில் இந்நிறுவனத்தின் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா YZF-R15 பைக்கின் வரலாறு :
'ரேஸ் டிராக்கிலும் சாதாரண சாலைகளிலும் ஓட்டுவதற்கு, அட்டகாசமான 150சிசி பைக் வேண்டும்' என்ற பெருமையை, 2008-ல் அறிமுகமான முதல் வெர்ஷன் YZF-R15 பெற்றது அறிந்ததே. இதனால் விரைவாகவே ஒரு நிலையான ரசிகர் வட்டத்தைப் பெற்ற இந்த பைக்கின் டிமாண்ட், காலப்போக்கில் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக, YZF-R15 பைக்கின் இரண்டாவது வெர்ஷனை, கடந்த 2011-ல் களமிறங்கியது யமஹா.

தனது பைக்கில் வேகம் மற்றும் கையாளுமையை விரும்பும் யூத் பைக்கர்களை, இந்த பைக் ஒட்டுமொத்தமாகத் தனது பக்கம் ஈர்த்துவிட்டது என்பதே நிதர்சனம். 'உயரமான பில்லியன் சீட் வசதியாக இல்லை' என்ற குறைபாட்டைக் களையும் விதமாக, சிங்கிள் பீஸ் சீட்டுடன் கூடிய YZF-R15 S எனும் மாடலை, கடந்த 2015-ல் கொண்டுவந்தது யமஹா. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, YZF-R15 பைக்கின் மூன்றாவது வெர்ஷன், சர்வதேச சந்தைகளைத் தொடர்ந்து இந்தியச் சந்தையிலும் டயர் பதிக்க உள்ளது.

YZF-R15 V3.0 பைக்கின் டிசைன் எப்படி..?
YZF-R15 V3.0 பைக்கின் வடிவமைப்பு, YZF-R6 மற்றும் YZF-R1 பைக்கை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இரட்டை LED ஹெட்லைட்டுக்கு (DRL உடன்) நடுவே ஸ்டைலாக இருக்கும் ஏர் வென்ட் மற்றும் LED டெயில் லைட், இதற்கான சிறந்த உதாரணம். மேலும் ஃபுல்ஃபேரிங்கும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது. ஆனால் நீளமான எக்ஸாஸ்ட் பைப்தான், ஏனோ பைக்கின் ஸ்போர்ட்டியான டிசைனுடன் மேட்ச்சாகவில்லை. YZF-R15 V2.0 பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், YZF-R15 V3.0 பைக்கில் அது 11 லிட்டராகக் குறைந்துவிட்டது. கூடவே வீல்பேஸும், முன்பைவிட 25மிமீ குறைந்துவிட்டது (1325மிமீ).

ஆனால் முந்தைய மாடலைவிட 20மிமீ கூடுதல் நீளம் (1,990மிமீ), 55மிமீ கூடுதல் அகலம் (725மிமீ), 65 மிமீ கூடுதல் உயரம் (1,135மிமீ), 5 மிமீ அதிகரிக்கப்பட்ட சீட் உயரம் (815மிமீ) என YZF-R15 V3.0 அளவுகளில் வளர்ந்திருக்கிறது. YZF-R15 V2.0 பைக்கில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, கேடிஎம் பைக்குகளில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (கியர் ஷிஃப்ட் லைட் உடன்), YZF-R15 V3.0 பைக்கில் இருக்கிறது. பைக்கின் இருபுறமும் இருக்கும் டிஸ்க் பிரேக்கின் அளவு, 20 மிமீ அதிகரித்துள்ளது (Front - 282மிமீ, Rear: 240மிமீ).

மற்றபடி அதே DeltaBox ஃப்ரேம் - அலுமினியம் ஸ்விங் ஆர்ம் ஆகியவை தொடர்ந்தாலும், அவற்றின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், YZF-R15 V3.0 பைக்கின் எடை, முன்பைவிட 1 கிலோ மட்டுமே அதிகரித்திருக்கிறது (137 கிலோ). தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் YZF-R15 V3.0 பைக்கில், சர்வதேச மாடலைப் போலவே இங்கும் ஏபிஎஸ் இல்லாதது மைனஸ். ஆனால் இந்தியாவில் புதிதாக அமலுக்கு வரவிருக்கும் மோட்டார் வாகன கட்டுப்பாடு விதிகளின்படி, ஏப்ரல் 1, 2018-க்குப் பின்பு வெளிவரும் 125-சிசிக்கும் அதிகமான பைக்குகளில், ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவே ஏப்ரல் 1, 2018-க்கு முந்தைய மாடலாக இருந்தால், அதில் ஏபிஎஸ் அமைப்பைப் பொருத்தி வழங்க, ஒரு ஆண்டு காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பைக், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாக (பெரும்பாலும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ) அறிமுகமாகும் எனத் தெரிகிறது. சென்னை ஆன்ரோடு விலையான 1.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் YZF-R15 V2.0 பைக்கைவிட, புதிதாக வரப்போகும் YZF-R15 V3.0 பைக்கின் விலை, நிச்சயம் அதிகமாகவே இருக்கும் எனலாம்.

பைக்கில் என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன..?

சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் பைக்கில், அப்சைட்-டவுன் ஃபோர்க், ஜப்பானின் IRC tடியூப்லெஸ் டயர்கள், ஸ்டைலான முன்பக்க ஃபெண்டர் மற்றும் பின்பக்க அலுமினியம் ஃபுட் பெக் ஆகியவை இருந்தன. ஆனால் இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மாடலில், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க், MRF டியூப்லெஸ் டயர்கள், வழக்கமான முன்பக்க ஃபெண்டர் மற்றும் ஸ்டீல் பின்பக்க ஃபுட் பெக் உள்ளன.
டயரின் மேக்கில் வித்தியாசம் இருந்தாலும், அளவுகளில் மாற்றம் இருக்காது என நம்பலாம். (Front - 100/80-R17, Rear: 140/70-R17). மற்றபடி தற்போது விற்பனையில் இருக்கும் பைக்கில் இருக்கும் 150 சிசி இன்ஜினுக்குப் பதிலாக, சர்வதேச மாடலில் பொருத்தப்பட்டுள்ள சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4 வால்வு, 155சிசி, Fi-இன்ஜினே, இந்த பைக்கில் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இதில் அனைத்து வேகங்களிலும் பவரைச் சீராக வழங்கக்கூடிய யமஹாவின் புகழ்பெற்ற வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் (VVA) தொழில்நுட்பம் மற்றும் Diasil & Forged இன்ஜின் பாகங்கள் இடம்பெற்றிருப்பதால், முன்பைவிட அதிகமான 19.3bhp@10,000rpm பவரும், 1.47kgm@8,500rpm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பும் இருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் பைக்கின் விலையைக் கட்டுக்குள் வைக்க, இதில் எத்தனை வசதிகளை யமஹா விட்டுக்கொடுக்கும் என்பது புதிராகவே இருக்கிறது. ஒருவேளை வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் நீக்கப்பட்டால், இந்திய மாடலின் பவர் மற்றும் டார்க் சற்று குறையும். மேலும் ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பும் இருக்குமா என்பது, பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கிற்குப் போட்டியாக இந்த பைக் விற்பனைக்கு வரும்போதுதான் தெரியவரும்.

01/11/2017

10 லட்சம் டூ - வீலர்கள் உற்பத்தி: யமஹா சாதனை-சென்னையில் !!!

சென்னையில் உள்ள வல்லம் வடகலில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில், 2.5 ஆண்டுகளில் 10 லட்சம் டூவீலர்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான யமஹா.

இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 8.5 லட்சம் டூவீலர்களும், இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1.5 லட்சம் டூவீலர்களும் அடக்கம். இந்த 10 லட்சம் டூவீலர்களில், யமஹாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டரான ஃபேஸினோ மட்டும், 3.7 லட்சம் டூவீலர்கள் என்பது கொசுறுத் தகவல். யமஹாவின் சென்னை தொழிற்சாலையில், ஒரே நேரத்தில் பத்து டூவீலர்கள் தயாரிக்கப்படுகிறது என எடுத்துக் கொண்டால், அதில் ஏழு ஸ்கூட்டர்கள் - மூன்று பைக்குகள் என்ற விகிதத்தில் உற்பத்தி அமைந்திருக்கிறது.

இந்நிறுவனம் ஏற்றுமதி செய்த 1.5 லட்சம் டூவீலர்களில் ஃபேஸினோ, ரே-ZR, FZ ஆகியவை, அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. வருடத்துக்கு 4.5 லட்சம் டூவீலர்களைத் தயாரிக்கும் வகையில், சென்னையில் 1300 கோடி முதலீட்டில், இந்தத் தொழிற்சாலையை மார்ச் 2015-ல் நிறுவியது யமஹா. தற்போது தனது வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால். வருடத்துக்கு 9 லட்சம் டூவீலர்கள் என உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, அடுத்த ஆண்டில் மேலும் 200 கோடி ரூபாயை இதற்காகச் செலவு செய்ய உள்ளது யமஹா.

2017 மாருதி சுஸூகி S-க்ராஸ்: 8.49 லட்சத்துக்குக் களமிறங்கிய இந்த காரில் என்ன ஸ்பெஷல் ?ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், ...
31/10/2017

2017 மாருதி சுஸூகி S-க்ராஸ்: 8.49 லட்சத்துக்குக் களமிறங்கிய இந்த காரில் என்ன ஸ்பெஷல் ?

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், ஹோண்டா BR-V ஆகிய மிட் சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, 8.49 - 11.29 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை) ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட S-க்ராஸ் காரைக் களமிறக்கியுள்ளது மாருதி சுஸூகி.

இந்த காரின் 4 வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள், ABS, EBD, பின்பக்க இருக்கைக்கான ISOFIX Child Seat Mount போன்ற பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. S-க்ராஸின் வெளிப்புறத்தில், புதிய க்ரோம் க்ரில்லின் இருபுறமும் LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளன.

க்ரில்லுக்குக் கிழே இருக்கும் பம்பர், க்ரில்லுக்கு மேலே இருக்கும் பானெட் ஆகியவையும் புதிய தோற்றத்தில் அசத்துகின்றன. காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் டூயல் டோன் அலாய் வீல்களில், முன்பைவிட அகலமான டயர்கள் (215/60 R16)பொருத்தப்பட்டுள்ளன. இதுவே பின்பக்கம் என்றால், LED டெயில்லைட்தான் ஒரே மாற்றம்.

முந்தைய மாடலில் இருந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.மேலும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் மற்றோரு டீசல் இன்ஜின் ஆப்ஷனான 1.3 லிட்டர் டீசல் இன்ஜினில், சியாஸ் மற்றும் எர்டிகாவில் இருக்கும் SHVS அமைப்பு (Start-Stop, Brake Energy Regeneration, Integrated Starter Generator Motor)சேர்க்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. Piano Black ஃப்னிஷ் உடனான சென்டர் கன்சோல், க்ரோம் வேலைப்பாடுகள், தொடுவதற்கு மென்மையான ப்ளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டு, லெதர் சுற்றப்பட்ட சென்டர் ஆர்ம் ரெஸ்ட், Apple CarPlay - Android Auto உடனான ஸ்மார்ட் பிளே சிஸ்டம் ஆகியவை, இதற்கான சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். S-க்ராஸின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை பின்வருமாறு,
S-Cross Sigma: ரூ. 8.49 லட்சம்
S-Cross Delta: ரூ. 9.39 லட்சம்
S-Cross Zeta: ரூ. 9.98 லட்சம்
S-Cross Alpha: ரூ. 11.29 லட்சம்.

ஸ்கோடாவின் 7 சீட்டர் கோடியாக் எஸ்யூவி _34.49 லட்சத்துக்கு அறிமுகமானது !!!தனது பெர்ஃபாமென்ஸ் செடான் காரான ஆக்டேவியா RS கா...
25/10/2017

ஸ்கோடாவின் 7 சீட்டர் கோடியாக் எஸ்யூவி _34.49 லட்சத்துக்கு அறிமுகமானது !!!

தனது பெர்ஃபாமென்ஸ் செடான் காரான ஆக்டேவியா RS காரை, கடந்த மாதம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் களமிறக்கிய ஸ்கோடா, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டொயோட்டா பார்ச்சூனர் - ஃபோர்டு எண்டேவர் - ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, Alaskan கரடியைப் பின்பற்றி பெயரிடப்பட்டிருக்கும் கோடியாக் எனும் லக்ஸூரி எஸ்யூவியை, Style எனும் ஒரே டாப் வேரியன்ட்டில் 34.49 லட்சத்துக்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஸ்கோடாவின் முதல் 7 சீட் எஸ்யூவியாகவும், விலை அதிகமான காராகவும் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே சூப்பர்ப் செடான் தயாரிக்கப்படும் MQB பிளாட்ஃபார்மில்தான் கோடியாக் எஸ்யூவியும் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கை கோடியாக் எஸ்யூவி பெற்றிருக்கிறது. சந்தை தேவைகளுக்கு ஏற்ப, 180bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், கோடியாக் பின்னாளில் வெளிவருவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கோடியாக் மோனோகாக் சேஸியை கொண்டிருந்தாலும், எஸ்யூவிகளுக்கு ஏற்றபடியான நீளம் (4,697மிமீ) - அகலம் (1,882மிமீ) - உயரம் (1,665மிமீ) என MQB பிளாட்ஃபார்ம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த எஸ்யூவியின் 1,791மிமீ வீல்பேஸ் - 188மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 300மிமீ ஆழத்தில் செல்லக்கூடிய திறன் அமைந்திருக்கின்றது. ஆல் வீல் டிரைவ் அமைப்பு இருப்பதால், 270 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கும் கோடியாக் எஸ்யூவியில் கொஞ்சம் ஆஃப் ரோடிங்கும் செய்யலாம். இதில் 143bhp பவர் - 34kgm டார்க் - 16.25kpl அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் TDI டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளை விட இதன் எடை குறைவு (1.8 டன்) என்பதால், இன்ஜின் பவர் ஒரு பிரச்னையாக இருக்காது என நம்பலாம்.

LED ஹெட்லைட் & டெயில் லைட், Hands-Free பார்க்கிங் அசிஸ்ட், ஆப்பிள் கார் பிளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - 12 ஸ்பீக்கர்களைக் கொண்ட Canton ஆடியோ சிஸ்டம் உடனான 8 இன்ச் Connect இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காரின் 180 டிகிரி View வழங்கும் 4 கேமராக்கள், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லைட் & வைப்பர், எலெக்ட்ரிக் டெயில் கேட், Drowsiness Sensor, Magnetised Flashlight, அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய முதல் 2 வரிசை இருக்கைகள், 10 கலரில் இயங்கும் கேபின் ஆம்பியன்ட் லைட்டிங் என, கோடியாக் எஸ்யூவியில் சிறப்பம்சங்களை வாரி இறைத்திருக்கிறது.

அப்படி என்ன ஸ்பெஷல்? சேவாக்குக்கு சச்சின் பரிசளித்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்... இந்த பிரிமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடானில்?...
19/10/2017

அப்படி என்ன ஸ்பெஷல்? சேவாக்குக்கு சச்சின் பரிசளித்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்... இந்த பிரிமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடானில்?

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான விரேந்தர் சேவாக், அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்பெற்றவர். சமீப காலங்களில், கிரிக்கெட் மைதானங்களில் காட்டிய அதிரடியை ட்விட்டரில் காட்டிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக, இந்திய அணியின் மற்றோரு முன்னாள் துவக்க ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கருக்கும், பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கும் ட்விட்டரில் ("Thank you paaji and Grateful for this!") தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

2003 உலகக்கோப்பை போட்டிகளின் முதல், சேவாக் ஓய்வு பெறும் காலம் வரை, இந்திய அணியின் துவக்க ஜோடியாக களமிறங்கிய இவர்கள், களத்துக்கு வெளியேயும் சிறந்த நட்புறவைக் கொண்டிருக்கின்றனர். இதன் வெளிப்பாடாக, தற்போது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சச்சின், புதிதாக ஒரு 7 சீரிஸ் காரை, சேவாக்கிற்குப் பரிசளித்ததே, இந்த ட்வீட்டிற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் விதமாக, (Glad you bought the car of your dreams!! They have been my favourite cars for a number of years. Sheer driving pleasure!! என சச்சீனும் ட்வீட்டியுள்ளார். இதற்கு ''தளபதி'' ரஜினி பாணியில், ''நட்புனா என்னனு தெரியுமா? சச்சின்னா என்னன்னு தெரியுமா?'' என உருகியுள்ளார்.

7 சீரிஸ் காரில், அப்படி என்ன ஸ்பெஷல்?

பிஎம்டபிள்யூவின் பிரிமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரான 7 சீரிஸ், அந்நிறுவனத்தின் (Modular CLAR - Cluster Architecture) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட ஷார்ப்பான டிசைனையும், 100 கிலோ குறைவான எடையையும் கொண்டிருக்கும் 7 சீரிஸ், அதிகப்படியான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. Gesture Control, ரிமோட் பார்க் அசிஸ்ட், 3D கிராஃபிக்ஸ் Interface, Heads Up Display (HUD), 16 ஸ்பீக்கர் - 1400 வாட் Bowers & Wilkins ஆடியோ சிஸ்டம், லேசர் ஹெட்லைட், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியைக் கொண்டிருக்கும் பின்பக்க இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங், Sky Lounge ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.

இதில் தொழில்நுட்பத்தின் உச்சமாக, காருடன் வழங்கப்பட்டிருக்கும் Display Key Fob-ல் இருக்கும் டச் கமாண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, காருக்குள் நுழையாமலேயே பார்க் செய்துகொள்ளும் வசதி இருப்பது பெரிய ப்ளஸ். 3.0 லிட்டர், In-Line 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட 730Ld மாடலின் சென்னை ஆன்-ரோடு விலை, 1.5 கோடியைத் தொடுகிறது. 265bhp பவர் மற்றும் 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த கார், 0 - 100கிமீ வேகத்தை வெறும் 6.2 விநாடிகளிலேயே எட்டிவிடக்கூடிய திறனைக் கொண்டிருப்பதுடன், அதிகபட்சமாக 250கிமீ வரை செல்கிறது.

இதற்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரியாக்‌ஷன் என்ன?
(Welcome to the world of Sheer Driving Pleasure ! Have a good ride) என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், சேவாக்கை தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவராக மாறியதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, சச்சின் டெண்டுல்கரும் ஒரு 7 சீரிஸ் காரை வைத்திருக்கிறார் என்பது கொசுறு தகவல். இந்த பிரீமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரின் டாப் வேரியன்ட்டான M760 Li காரின் சென்னை ஆன்ரோடு விலை, 2.8 கோடி ரூபாயைத் தொடுகிறது.

இதில் முன்னே சொன்ன வசதிகளுடன், 6.6 லிட்டர் ட்வின் டர்போ12 சிலிண்டர் V12 பெட்ரோல் இன்ஜின் - xDrive ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. 4 வீல்களுக்கும், இந்த 12 சிலிண்டர் இன்ஜினின் 601bhp பவர் மற்றும் 80kgm டார்க், சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே 0 - 100கிமீ வேகத்தை, 3.7 விநாடிகளிலேயே ''ஜஸ்ட் லைக் தட்'' கடந்துவிடுகிறது. லக்ஸூரி கார் என்பதால், கேபினிலும் லெதர் - அலுமினியம் - மர வேலைப்பாடுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

யுஎம் -நிறுவனத்தின் இரு புதிய க்ரூஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல் !!!சென்ற வருடம் அறிமுகமான ரெனிகெய்ட் ஸ்போர்ட் S, ரெனிகெய்...
14/10/2017

யுஎம் -நிறுவனத்தின் இரு புதிய க்ரூஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல் !!!

சென்ற வருடம் அறிமுகமான ரெனிகெய்ட் ஸ்போர்ட் S, ரெனிகெய்ட் கமாண்டோ ஆகிய க்ரூஸர் பைக்குகளைத் தொடர்ந்து, இரு Gloss நிறங்களில் க்ளாசிக் (Classic - 1.94 லட்சம், சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) மற்றும் ஒரே மேட் கலரில் மொஹவ் (Mojave - 1.86 லட்சம், சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) எனும் இரு புதிய க்ரூஸர் பைக்குகளை, அதே ரெனிகெய்ட் சீரிஸில் அறிமுகப்படுத்தியுள்ளது யுஎம் நிறுவனம்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த இரு பைக்குகளிலும் இருப்பது, தற்போது விற்பனையில் இருக்கும் இரு ரெனிகாடே சீரிஸ் பைக்குகளில் இருக்கும் அதே 4 வால்வு, 279.5சிசி, லிக்விட் கூல்ட் இன்ஜின்தான்! எனவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், வெளிப்படுத்தக்கூடிய 25.15bhp பவர் மற்றும் 2.3kgm டார்க் எனப் பெர்ஃபாமென்ஸிலும் வித்தியாசம் இல்லை. 179 கிலோ எடை, 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 18 லிட்டர் பெட்ரோல் டேங்க், அனலாக் - டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் என டெக்னிக்கல் விபரங்களிலும் மாற்றங்கள் இல்லை. இந்த இரு பைக்குகளின் புக்கிங், ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

பெயருக்கு ஏற்றபடியே, க்ளாசிக் பைக் போன்ற டிசைனைக் கொண்டிருக்கிறது ரெனிகெய்ட் க்ளாசிக். பைக் முழுக்க வியாபித்திருக்கும் க்ரோம் ஃப்னிஷ் (ஸ்போக் வீல், ரியர் வியூ மிரர், ஹெட்லைட், எக்ஸாஸ்ட் பைப், இன்ஜின் கேஸ், இண்டிகேட்டர், பெடல், க்ராஷ் கார்ட்) இதனை உறுதிபடுத்தி விடுகிறது. இதுவே அமெரிக்காவின் பெரிய பாலைவனமான Mojave-ன் பெயரைக் கொண்டிருக்கும் ரெனிகெய்ட் மொஹவ் என்றால், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 Desert Storm பைக்கை நினைவுபடுத்தும் வகையிலான கலரில் மேட் ஃப்னிஷைக் கொண்டிருக்கிறது.

க்ளாசிக் பைக்கில் க்ரோம் ஃப்னிஷில் இருக்கும் பாகங்கள் அனைத்தும்
இங்கே மேட் ஃப்னிஷில் இருக்கின்றன. மற்றபடி இரண்டு பைக்குகளுக்கும் பொதுவாக, பொருட்களை வைத்துக் கொள்வதற்கான Saddle Bag - பெட்ரோல் டேங்க் மீது Zip Pouch - விபத்து நேரத்தில் கால்களைப் பாதுகாக்கக்கூடிய Leg Guard - ஸ்பெஷலான சீட் கவர் ஆகியவை இருக்கின்றன. மேலும் ரெனிகெய்ட் பைக்குகளுக்கே பொதுவான அம்சங்களான பெட்ரோல் டேங்க்கின் மீது இருக்கும் USB சார்ஜிங் பாயின்ட், பின்பக்க சீட்டில் அமர்பவருக்கான அலாய் Back Rest, காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கக்கூடிய பெரிய Poly Carbonate விண்ட் ஷீல்ட் ஆகியவை இங்கும் தொடர்கின்றன.

இப்படி டூரிங் பைக்குகளாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இவற்றை விற்பனை செய்ய, இந்தியா முழுக்க 57 டீலர்களை வைத்திருக்கிறது யுஎம் நிறுவனம். மேலும் 2 வருட வாரன்ட்டி, ஒரு வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய Road Side Assistance ஆகியவை, ஒவ்வொரு பைக்குக்கும் வழங்கப்படுகிறது. உத்தரகாண்ட்டில் இருக்கும் காஷிப்பூரில், இந்நிறுவனம் தனது பைக்குகளை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையைக் கொண்டிருக்கிறது. 75% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் பைக்கில் இடம்பெற்றுள்ளதால், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் பைக் கிடைக்கிறது எனலாம்.

இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்துள்ள யுஎம் நிறுவனம், விரைவில் ஒரு அட்வென்ச்சர் பைக்கை வெளியிட உள்ளது. மேலும் இந்தியா முழுக்க டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ள இந்நிறுவனம், தமிழகத்தில் சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூரைத் தொடர்ந்து, தீபாவளி நேரத்தில் மதுரையில் புதிதாக டீலரை நிறுவ உள்ளது. 20 முதல் 35 வயதில் இருப்பவர்கள் தமது வாடிக்கையாளர்களாக இருப்பதுடன், கமாண்டோ பைக்குக்கு அதிரடியான வரவேற்பு கிடைத்ததாகவும், யுஎம் நிறுவனம் கூறியுள்ளது.

05/10/2017
பாரத் பென்ஸ்_இந்தியாவின் முதல் BS-V டிரக் அறிமுகம் !!!சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொட...
04/10/2017

பாரத் பென்ஸ்_
இந்தியாவின் முதல் BS-V டிரக் அறிமுகம் !!!

சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது பாரத் பென்ஸ். பணமதிப்பிழப்பு, BS-3, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு காரணங்களால், கமர்ஷியல் வாகனச் சந்தை கொஞ்சம் சரிவில் இருந்தாலும், இந்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான டிரக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து, இந்நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

BS-IV டிரக்குகளைக் களமிறக்கிய பிறகு, 16 - 49 டன் டிரக் பிரிவில் பாரத் பென்ஸின் சந்தை மதிப்பு, இரண்டு இலக்கத்தைத் தொட்டிருப்பதே, விற்பனை ஏறுமுகத்தில் இருப்பதற்கான சிறந்த உதாரணம். எனவே டிமாண்ட் அதிகரித்துள்ளதால், சென்னை ஓரகடத்தில் இருக்கும் தனது டிரக் தயாரிக்கும் தொழிற்சாலையில், உற்பத்தியை அதிகரிக்க உள்ளது பாரத் பென்ஸ்.

உள்நாட்டு விற்பனையுடன், 2013 முதலாக இந்நிறுவனம், டிரக்குகளை சென்னையில் இருந்து உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துவருவது கவனிக்கத்தக்கது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, 40 புதியசந்தைகளுக்கும் டிரக்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது பாரத் பென்ஸ்.

இந்தியாவில் தனது 5-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, BS-V (Euro-V) மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் நகர்ப்புற பயணங்களுக்கான Medium Duty வகை (9 - 12 டன்) டிரக்குகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை தற்போது புழக்கத்தில் இருக்கும் BS-IV டிரக்குகளுடன் ஒப்பிடும்போது, 40% குறைவான NOx மாசை வெளியிடுவதாக பாரத் பென்ஸ் கூறியுள்ளது. இதற்கு BS-IV டிரக்கின் Selective Catalytic Reduction (SCR) சிஸ்டத்தை, BS-V விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

மேலும் BS-IV டிரக்கின் அதே விலையில் BS-V டிரக்கை வெளியிட்டு அசத்தியுள்ளது இந்நிறுவனம். இந்தப் புதிய BS-V டிரக்குகள், BS-IV எரிபொருளில் எந்த பிரச்னையும் இன்றி இயங்கும் என்பதுடன், அதே மைலேஜையும் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசடைவதில் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் Nitrogen oxide (NOx), வாகனங்கள் உமிழும் புகையில் அதிகளவில் இருக்கிறது.

இது சுற்றச்சூழலை பாதிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதுடன்,மனிதர்களுக்குச் சுவாசப் பிரச்னைகளையும் தரவல்லது. 2020-ல் BS-VI மாசு விதிகள் மற்றும் 2030-க்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் நிறைந்த நாடாக இந்தியாவை மாற்றவும் காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாட்டின் முதல் BS-V டிரக்கினால், சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்கும் முயற்சியை எடுத்திருக்கும் பாரத் பென்ஸ் நிறுவனம், நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்.

10 ஆண்டுகள்....டிவிஎஸ் அப்பாச்சி RTR !!!அப்பாச்சி... ரேஸ் டிராக்குகளில் பைக் ஓட்டக்கூடிய/ஓட்டிக்கொண்டிருக்கும் பலரும், ம...
25/09/2017

10 ஆண்டுகள்....டிவிஎஸ் அப்பாச்சி RTR !!!

அப்பாச்சி... ரேஸ் டிராக்குகளில் பைக் ஓட்டக்கூடிய/ஓட்டிக்கொண்டிருக்கும் பலரும், முதன்முறையாக அங்கே ஓட்டிய பைக் இதுவாகத்தான் இருக்கும்! இப்படி ரேஸ் டிராக்கில் பிறந்து சாலைகளுக்கு வந்த அப்பாச்சி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பான பைக்குகளில் ஒன்றாக இன்றளவும் இருக்கிறது. முதன்முதலில் 150சிசி மாடலாக, கடந்த 2005-ல் அறிமுகமான அப்பாச்சி 150 E-Surge, சுஸூகி ஃபியரோ F2 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு ரேஸ் பைக்குக்கான குணாதிசியங்களுடன், RTR என்ற அடைமொழியுடன் அப்பாச்சி களமிறங்கியது 2007-ல்தான்! எனவே இந்தியாவில் அப்பாச்சி RTR பைக்கின் ஆதிக்கம் தொடங்கி, 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

2007: டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 ;

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் ஒரு பைக், ரேஸ் பைக்கின் திறனுடன் வெளிவந்தது இல்லை என்ற கூற்றுக்குச் சரியான தீர்வாக அமைந்தது அப்பாச்சி RTR பைக் என்றால் அது மிகையில்லை; ரேஸிங்கில் 33 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கும் டிவிஎஸ் தயாரித்த அப்பாச்சி RTR பைக்கை வடிவமைத்த பொறியாளர்கள் குழுவில் இருந்த பலரும் பைக்கர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. அப்பாச்சி RTR வரலாற்றில், OverSquare இன்ஜினுடன் வெளிவந்த அப்பாச்சி RTR 160-ல் இருந்த இன்ஜின். அதன் போட்டியாளர்களைவிட அதிக பவரை வெளிப்படுத்தியதுடன், குறைவான எடையையும் கொண்டிருந்தது. மேலும் ரேஸ் டிராக்கிலும், சாலையிலும் சிறப்பான கையாளுமையை அளிக்கக்கூடிய சேஸி தவிர, இந்தியாவிலேயே முதன்முறையாக பெட்டல் டிஸ்க் பயன்படுத்தப்பட்டது அப்பாச்சி RTR-ல்தான்; இவை எல்லாம் ஒன்று சேரும்போது, நன்கு ரெவ் ஆகி வேகமெடுக்கக்கூடிய, நினைத்த நேரத்தில் நிறுத்தக்கூடிய பைக்காக அப்பாச்சி RTR உருவானதன் சுவையான பின்னணி இதுதான்.

2009: டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ;

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்குகளில், ஏபிஎஸ் உடன் வெளிவந்த முதல் பைக் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்பாச்சி RTR 180, அப்பாச்சி RTR 160-யைவிடக் கூடுதலான பெர்ஃபாமென்ஸ் வேண்டும் என்பவர்களுக்கான விடையாக அமைந்தது.
இந்தியாவில் ஸ்டைலைவிட பெர்ஃபாமென்ஸுக்கே முக்கியத்துவம் அதிகம் என்ற மனநிலையில் டிவிஎஸ் இருந்ததாலேயே, இந்த 10 ஆண்டுகளில் தனக்கென ஒரு நம்பகத்தன்மையான ரசிகர் வட்டத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.

2012: டிவிஎஸ் அப்பாச்சி RTR ஃபேஸ்லிஃப்ட் :

பைக்கின் பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருந்தாலும், நீண்ட நாட்களாக டிசைனில் மாற்றமில்லை என்ற காரணத்தாலேயே, போட்டியாளர்களைவிட விற்பனை எண்ணிக்கையில் அப்பாச்சி RTR, பல சந்தர்ப்பங்களில் பின்தங்கியும் இருக்கிறது! இதனைச் சரிசெய்யும் பொருட்டு, டிவிஎஸ் 2012-ல் பேஸ்ஃலிஃப்ட் செய்யப்பட்ட அப்பாச்சி RTR பைக்கை வெளியிட்டது.ஆனால் இது டிவிஎஸ் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், அதன் ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை ஏற்படுத்தியதுதான் சோதனை! தொழில்நுட்ப ரீதியிலும் அப்பாச்சி RTR, காலப்போக்கில் வளர்ந்துகொண்டுதான் இருந்தது.

2016: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V :

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், ஏபிஎஸ், 4 வால்வு, ஆயில் கூலர், மோனோஷாக், LED DRL, டிஜிட்டல் டயல்கள் போன்ற வசதிகளுடன், பக்காவான ஸ்ட்ரீட் ஃபைட்டர் டிசைன் மற்றும் சிறப்பான கையாளுமையுடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் என மிகப்பெரிய அளவில் முன்னேறிய தயாரிப்பாகக் கடந்தாண்டு வெளிவந்தது அப்பாச்சி RTR 200. கார்புரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன்களைக் கொண்டிருந்த 197.75 சிசி இன்ஜின், 21bhp பவரை வெளிப்படுத்துகிறது. ''Indian Bike of the Year'' உட்பட இந்திய ஆட்டோமொபைல் துறையின் பல உயரிய விருதுகளைப் பெற்ற அப்பாச்சி RTR 200, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருக்கிறது.


2017: டிவிஎஸ் அப்பாச்சி RR 310 S :

தற்போது பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி அமைத்திருக்கும் டிவிஎஸ், அந்நிறுவனத்தின் G310R ஸ்ட்ரீட் பைக்கை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, டிவிஎஸ் வடிவமைத்த ஃபுல் பேரிங் கொண்ட பைக்தான் அக்குலா 310. இதனைக் கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது குறிப்பிடத்தக்கது; எனவே பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில், தனது மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்தும் விதமாக, அப்பாச்சி RR310S எனும் பைக்கை இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் களமிறக்க உள்ளது டிவிஎஸ்.

Address

193 B, Tiruvannamalai Road (Near SBI)
Gingee
604202

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919787876389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Balaji Auto Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Balaji Auto Consultancy:

Share